தமிழகத்தை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். அவர் வகித்து வந்த 2 துறைகளுமே வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு வழங்கியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்று மாலை செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறக்கத்திருக்கிறார் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உட்பட கடுமையான குற்ற வழக்குகள் இருக்கின்றனர்.
அந்த வழக்குகள் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகவே அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் சட்ட முறையில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும் எனவும், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படலாம் என்றும் ஆளுநர் கூறிய நிலையில், இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கம் செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றுள்ளார்.
இந்திய அரசியலில் அமைச்சர் ஒருவரை ஆளுநர் பதவி நீக்கம் செய்வது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன்னதாக கேரள மாநில ஆளுநர் முகமது கான் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யலாம் என எச்சரிக்கை செய்தார். அதற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அமைச்சர்களை நியமனம் செய்யவும் பதவி நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு உரிமை இல்லை என்று பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.