fbpx

’இதுதான் ஜாக்பாட்’..!! லாட்டரியில் கோவை இளைஞருக்கு ரூ.25 கோடி பரிசு..!!

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் திருவோணம் பம்பர் பிஆர் 93 எனும் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் பரிசு என்பது ரூ.25 கோடி என அறிவிக்கப்பட்டது.

இந்த லாட்டரி சீட்டை கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வாங்கினார். இதையடுத்து, அந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் பரிசு கோவையை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு விழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த நடராஜன் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார். இவர் மொத்தம் 10 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிய நிலையில் தற்போது அவருக்கு முதல் பரிசி கிடைத்துள்ளார்.

இந்த லாட்டரியை கோழிக்கோடுவை சேர்ந்த பாவா ஏஜென்சி விற்பனை செய்தது. நடராஜன் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை கடந்த 4 நாட்களுக்கு முன்பு குருசாமி என்பவரிடம் இருந்து வாங்கிய நிலையில், தற்போது அவர் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை..!! எப்படி பெறுவது..?

Wed Sep 20 , 2023
நாடு முழுவதும் ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு அட்டைதாரர்களுக்கு ஆயுஷ்மான் பரிசு திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தற்போது வரை பொதுமக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே பெற்று வந்தனர். இந்நிலையில், தற்போது ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய […]

You May Like