வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்தியாதன் கல்வி உதவி தொகை வழங்கப்பட்ட வருகிறது. அந்த வழக்கில் இந்த வருடத்திற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள 11 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் இருந்த 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக மார்க் பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதும், இதில் தகுதியான தமிழக மற்றும் புதுச்சேரியை சார்ந்த மாணவர்கள் www.vidyadhan.org என்ற இணையதளத்தின் மூலமாக ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்றும், கூடுதல் விவரங்களை அறிவதற்கு 966351731 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.