சீர்த்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கம் ஆகிய மூன்றும் எங்களது தாரக மந்திரமாக இருந்து வருகிறது என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பை பாராட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர் கோயில் தீர்மனத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நாட்டின் வளர்ச்சி பாதிக்கவில்லை. புதிய நாடாளுமன்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமர் பேசுகையில்,” ’சீர்த்திருத்தம்’, ’செயலாக்கம்’, ‘மாற்றம்’ என மூன்றும் எங்களின் தாரக மந்திரம். இது மூன்றும் ஒரே காலத்தில் நடப்பது அரிதானது. நாட்டு மக்கள் நிச்சயம் 17-வது மக்களவையின் செயல்பாடுகளை கண்டு பாரட்டாவும் ஆசிர்வதிக்கவும் செய்வார்கள். இந்த 5 ஆண்டுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது” என்று நாடு வளர்ச்சி பாதையில் பயணிப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.