fbpx

’சங்கி’ என்பதற்கு இதுதான் அர்த்தம்..!! புது விளக்கம் கொடுத்த வானதி சீனிவாசன்..!!

சங்கி’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புது விளக்கம் அளித்திருக்கிறார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்துடன் சென்றார் ரஜினிகாந்த். இதனால் ரஜினிகாந்தை சங்கி என்று விமர்சித்து மீம்ஸ்களும், ட்ரோல்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனது தந்தை சங்கி இல்லை என்றும், அவரை சங்கி என்று பலர் கூறுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்கவே மாட்டார் என்றும் கூறினார். ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு மீண்டும் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. எனது மகள் சரியாகவே பேசியுள்ளார். ஆன்மிகவாதியான என்னை சங்கி என்று கூறுவது அவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “பாஜகவுக்கு எதிரான கொள்கையை வைத்திருப்பவர்களும், எதிர்கருத்து வைத்திருப்பவர்களும் எங்களை இழிவுப்படுத்தும் ஒரு சொல்லாக ‘சங்கி’ என்பதை பயன்படுத்துகின்றனர். இது ரொம்ப நாளாகவே நடந்து கொண்டிருக்கிறது. சங்கி என்றால் என்ன என்று நான் அர்த்தம் சொல்லட்டுமா?

இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களில் சமசரம் செய்து கொள்ளாத உண்மையான குடிமக்கள் தான் சங்கி. அப்படி எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான். மேலும், ரஜினி, கமல், விஜய் என எல்லா நடிகர்களிடமும் ஆதரவை கேட்பது எங்களது வேலை என்று தெரிவித்தார். அதற்கு ஒரு செய்தியாளர் அப்புறம் ஏன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது தந்தை சங்கி இல்லைன்று கூறியுள்ளாரே என்று கேள்வியெழுப்பவே, “அதை பத்தி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? என்று சூடாகவே பதில் அளித்தார்.

Chella

Next Post

" நாடு முழுவதும் கட்டணம் இல்லா மருத்துவம்.." காப்பீடு நிறுவனங்களின் புதிய விதிமுறை.! சிறப்பம்சங்கள் என்ன.?

Mon Jan 29 , 2024
இன்றைய காலகட்டங்களில் மருத்துவ செலவுகள் பெரும்பாலானவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகிறது. நாட்டில் மருத்துவ வசதிகள் பெருமளவு அதிகரித்து இருந்தாலும் அவற்றுக்கான கட்டணமும் அதிகமாக இருப்பதால் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு ரூபாய் கூட பணம் செலுத்தாமல் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. மெடிக்கல் இன்சூரன்ஸ் விதிகளில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களால் ஜனவரி […]

You May Like