இந்த உலகில் எத்தனையோ மர்மமான இடங்கள் இருக்கின்றன. அந்த வகையில் உலகின் மிக மர்மமான ஹோட்டல் ஒன்று உள்ளது. உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்த ஹோட்டல் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
மர்மமான ஹோட்டல் வட கொரியாவில் அமைந்துள்ளது. அந்நாட்டின் பியோங்யாங்கில் 1,080 அடி உயரத்தில் பிரமிடு வடிவ மிகவும் உயரமான கட்டிடம் ரியுக்யோங் (Ryugyong) ஹோட்டல் ஆகும். அந்த நேரத்தில் உலகின் மிக உயரமான ஹோட்டலாக கருதப்பட்ட இது இன்றுவரை திறக்கப்படவில்லை.
மேலும் உயரமான ஹோட்டல் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் முதலில் 1992-ல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஹோட்டலின் கட்டுமான பணிகள் 1987-ல் தொடங்கியது. எனினும் 1992ல் இந்த ஹோட்டலின் கட்டுமான பணிகள் நிறுத்தபப்ட்டது. ஆனால் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா அதிக பிரச்சனைகளில் மூழ்கியதால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்த ஹோட்டல் பணிகளில் சிக்கலை ஏற்படுத்தியது.
அந்நாட்டு அதிபர் கிம் சங்-கின் மின் 80வது பிறந்தநாள், ஆனால் கட்டிட கட்டுமானம் மற்றும் பொருட்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான பிரச்சனைகள் ஆகியவை காரணமாக இந்த ஹோட்டலில் கட்டுமான பணிகள்முடிவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் விளைவாக, இது’சபிக்கப்பட்ட ஹோட்டல்’ என்று அழைக்கப்பட்டது.
வட கொரியாவின் பேய் ஹோட்டல்
‘கோஸ்ட் ஹோட்டல்’ என்று அழைக்கப்படும், Ryugyong ஹோட்டல் 55 பில்லியன் வோன்களுடன் (ரூ. 3,258,954,050) கட்டப்பட்டது, இது அந்த நேரத்தில் வட கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக இரண்டு சதவீதமாகும்.
இந்த மர்மமான ஹோட்டல் உலகின் மிக உயரமான ஹோட்டலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது இன்று வரை திறக்கப்படவில்லை. எனினும் இந்த ஹோட்டலின் அதன் வெறிச்சோடிய நிலை காரணமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த ஹோட்டல் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இது 7-வது உயரமான கட்டிடமாகவும், மனித வரலாற்றில் உலகின் மிக உயரமான ஹோட்டலாகவும் இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவின் மையப்பகுதியான பியாங்யாங்கில் அமைந்துள்ள இந்த கண்கவர் ஹோட்டல், சுமார் 1800 அடி உயரத்திற்கு கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. இந்த ஹோட்டலில் தற்போது 105 அறைகள் உள்ளன. ஆனால், ஒரு விருந்தாளி கூட அங்கு தங்கியதில்லை என்பது தான் சுவாரஸ்யமான தகவல்…
இந்த வித்தியாசமான ஹோட்டல் ‘சபிக்கப்பட்ட ஹோட்டல்’ அல்லது ‘பேய் ஹோட்டல்’ போன்ற அழைக்கப்படுகிறது. மேலும், சிலர் இதை ‘105 கட்டிடம்’ என்று குறிப்பிடுகின்றனர். மிக நீண்ட காலத்திற்கு முன்பு, எஸ்குயர் என்ற அமெரிக்க பத்திரிகை, மனித வரலாற்றில் மிக மோசமான கட்டிடம் என்று இந்த உயர்ந்த கட்டிடத்தை குறிப்பிட்டது.
திட்டமிட்டபடி ஹோட்டல் திறக்கப்பட்டிருந்தால், அதில் 5 சுழலும் உணவகங்கள் மற்றும் சுமார் 3,000 அறைகள் இருந்திருக்கும்.
2012 ஆம் ஆண்டில், வட கொரிய அரசாங்கம் Ryugyong ஹோட்டலின் கட்டுமானத்தை விரைவில் முடிப்பதாக உறுதியளித்தது. இருப்பினும், தொடர்ச்சியான தேதிகளைக் கொடுத்தாலும், இந்த ஹோட்டல் முழுமையடையாமல் உள்ளது. கட்டுமானப் பணிகளில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் சிக்கல்களால், இந்த ஹோட்டல் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : பேய்கள் நிறைந்த திகிலூட்டும் தீவு.. ஊரையே காலி செய்துவிட்டு சென்ற மக்கள்..!! எங்கே தெரியுமா?