fbpx

மறைந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா நடித்த ஒரே தமிழ்படம் இதுதான்!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்ற பழம்பெரும் நடிகரும் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா 350-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். எனினும் அவர் தமிழில் ஒரே ஒரு படத்தில் தோன்றி இருக்கின்றார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, சுசி.கணேசன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான ’கந்தசாமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு பின்னர் அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சிவாஜியின் ’தியாகி’ ரஜினியின் ’மாவீரன்’ கமலின் ’விஸ்வரூபம் திரைப்படங்களை அவர்தான் தயாரித்தார்.

79 வயதில் நடிகர் கிருஷ்ணா காலமானார். மகேஷ்பாபுவின் தந்தையான இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் உயிரிழந்தார்.

ஐந்து தசாப்தங்களாக இவர் திரைத்துறையில் இயங்கி வந்தவர். சுமார் 350-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரமுடன் ’கந்தசாமி’ திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணா சி.பி.ஐ. அதிகாரி கதாபாத்திரத்தில் வருவார். இது மட்டுமின்றி அவர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்

இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் தன் தாயை இழந்த மகேஷ்பாபுவுக்கு இது மற்றொரு அதிர்ச்சியாக உள்ளது. இதனால் அவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோக்கள் ரசிகர்களின் கண்களையும் குளமாக்குகின்றது. கிருஷ்ணா மறைவுக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். ’’350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இவருடைய இழப்பு தெலுங்கு திரைப்பட துறைக்கு மிகப்பெரிய இழப்பு’’ என சந்திர சேகராவ் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

#Breaking..!! ஐபிஎல் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் பொல்லார்ட் ஓய்வு அறிவிப்பு..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Tue Nov 15 , 2022
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட் அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகிறது. அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் மினி […]

You May Like