fbpx

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இதுதான் ஒரே வழி..!! செய்வீர்களா..? தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன டிப்ஸ்..!!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மருத்துவர்களுக்கு வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். காரணம் தொடர்ச்சியாக 36 மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நான் டாக்டராகவே இருந்திருப்பேன். கோடி கோடியாய் சம்பாதித்து இருப்பேன்.

மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். மருத்துவர்களுக்கு தப்பு செய்ய தெரியாது. அதனால் தான் அடிக்கடி சொல்லுவேன் டாக்டர்கள் கோட்டும் ஒய்ட்.. நோட்டும் ஒயிட். மருத்துவர்கள் சீருடை அணிவது ரொம்பவே அவசியம். வெயில் நேரம் இருப்பதால் சிரமமாக இருப்பதாக கூறினார்கள். இருப்பினும் வருங்காலத்தில் அரசுடன் பேசி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல, மருத்துவர்களுக்கு சீருடை வழங்குவது குறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

நமது உயிரை காப்பாற்றியாவது நோயாளிகளை காப்பாற்ற உறுதியேற்க வேண்டும். ஜிஎஸ்டி என்பது இந்தியாவுக்கான மிகப்பெரிய பொருளாதார புரட்சி. பெட்ரோல், டீசல் விலையையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து உள்ளது. அதற்கு பல மாநிலங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும்” எனக் கூறினார்.

Chella

Next Post

திருப்பூர் அருகே கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு……! மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்….!

Sat Jul 1 , 2023
திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20ம் தேடி வயிற்று வலி உண்டானது. இதனை தொடர்ந்து திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அவரது பிரேத பரிசோதனையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் சிறுமி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோரிடம் வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி கர்ப்பமாக […]

You May Like