fbpx

”பெரியார் சிலை இருக்க வேண்டிய இடம் இதுதான்”..!! அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!

சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக சாமானிய மக்களின் மனதை அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள சமூகங்களுக்கு எதிராக எப்படி திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது என்பது குறித்து அறிந்துகொண்டேன்.

வேங்கை வயல் விவகாரத்தில் இன்னமும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பெரம்பலூரில் கல் குவாரி எடுக்க சென்ற பட்டியலின தலைவர்களை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ளார்கள். தாக்கிய நபர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதேபோல் கிருஷ்ணகிரியில் பிரச்சனைகள் உள்ளன. ஒரு இடத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளது. இது மாதிரி தொடர்ச்சியான அவலங்களை திராவிட மாடல் ஆட்சியில் பார்க்க முடிகிறது” என்றார்.

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையின் கீழே பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களை அகற்றுவேன் என பேசியது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “பெரியார் மீது தமிழக பாஜகவுக்கு மதிப்பு உள்ளது. அவர் சமூக அநீதிக்கு எதிராக போராடியுள்ளார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கடவுள் இல்லை என கோவில் முன்புள்ள வாசகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதை மக்களின் முன்னால் ஒரு விவாதமாக வைக்கிறோம். அவரின் சிலை மற்றும் கருத்துகள் மற்ற தலைவர்களுக்கு இருப்பது போல் பொது இடத்தில் இருக்க வேண்டும். கோவில் அமைந்துள்ள 100 மீட்டருக்குள் அந்த வாசகங்கள் இருப்பது பொருத்தமானது அல்ல. சில அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் குறித்தும் பெரியார் பேசியுள்ளார்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

இதெல்லாம் ஒரு விளையாட்டா..? இப்படியா பண்ணுவாங்க..!! கொந்தளித்த கூல் சுரேஷ்..!!

Thu Nov 9 , 2023
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கொடுக்கப்பட்ட டாஸ்கை வாசிக்கும் ப்ராவோ, ‘இது ஒரு மெமரி டாஸ்க். இந்தக் கேள்விகள் அனைத்தும். உங்கள் பில்களின் அடிப்படையில் இருக்கும்’ என சொல்லி முடிக்கிறார். இதையடுத்து எல்லாரும் அதிர்ச்சியாக, ஜோவிகா மட்டும் பில் இருக்கு.. இருக்கு…என்று சொல்கிறார். அதன் பிறகு மறைத்து வைத்திருந்த […]

You May Like