பொதுவாக பலர் தங்களின் வீடுகளில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டியிருப்பார்கள். இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் பலருக்கு தெரியாது. ஆனால் பலர், இது வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவார்கள். நம் முன்னோர் செய்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அறிவியல் சார்ந்த சில விஷயம் இருக்கும். ஆனால் அது நமக்கு தெரிவதில்லை. அந்த வகையில் வீட்டு வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டுவதற்க்கும், அறிவியல் காரணம் உள்ளது. அந்த காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றில் ‘வைட்டமின் – சி’ அதிகமாக உள்ளது. இதனை ஒரு பருத்தி நூலில் கோர்ப்பதால், எலுமிச்சையின் சாறு மெதுவாக பருத்தி நூலின் வழியாக மிளகாயுடன் சேர்ந்து ஆவியாகிவிடும். அப்படி வெளியேறும் ஆவியில் உள்ள வாசனை, காற்றில் கலப்பதால் நம் சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த வாசனை காற்றில் பரவுவதன் மூலம் ஒரு புத்துணர்வும் கிடைக்கின்றது. மேலும், இந்த வாசத்தால் பூச்சிகள், விஷ சக்திகள், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கிறது. அடு மட்டும் இல்லாமல், அது மட்டும் இல்லாமல், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இது ஒரு சிறந்த வழியாகும்.