நடிகர், நடிகைகளின் திருமணம் என்றால் ரசிகர்கள் அந்த நாளை காண ஆவலாக இருப்பார்கள். அப்படி பல நடிகைகளின் திருமண புகைப்படங்கள் வெளியாகி மக்களுக்கு வியப்பை கொடுத்துள்ளது. இந்தநிலையில், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பகிர்ந்து கொண்ட நடிகை ஆலியா பட் எனது திருமணம் மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே நடந்தது. ஐவரி சப்யசாச்சி புடவையை துப்பட்டாவுடன் அணிந்திருந்தார். எனது திருமணத்திற்கு லெஹங்காவை தேர்வு செய்யாமல் புடவையை தேர்வு செய்ததது இதுதான் காரணம். எனக்கு புடவை பிடிக்கும். இது உலகிலேயே மிகவும் வசதியான ஆடை, அதனால்தான் நான் என் திருமணத்திற்கு அணிந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஆலியாவின் திருமண புடவை ரூ. 50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்ட முன்னணி நடிகைகளின் திருமண உடையின் விலைகளை பார்ப்போம். ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு ஏப்ரல் 20, 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நடிகை ஐஸ்வர்யா ராயின் திருமண உடை ரூ. 75 லட்சமாம். நீதா லுல்லா என்ற ஆடை வடிவமைப்பாளர் பாரம்பரிய காஞ்சிபுரம் புடவையில் அழகான தங்க பார்டர், படிகங்கள் மற்றும் உண்மையான தங்கத்தின் நூல் வேலைப்பாடுகளுடன் புடவையை உருவாக்கியுள்ளார்.
நடிகை ஷில்பாவிற்கும் ராஜ் குந்த்ராவும் திருமணம் செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவரது சிவப்பு நிற திருமண புடவையில் 8000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம், அதன் விலை சுமார் ரூ. 50 லட்சமாம். கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்காவிற்கும் 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரின் திருமண உடை மதிப்பு ரூ. 30 லட்சமாம். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸுக்கு திருமணம் நடந்தது. நடிகை அணிந்திருந்த சிந்தூர் சிவப்பு நிற லெஹங்கா ரூ. 13 லட்சமாம்.
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனேவின் திருமணம் இத்தாலியில் நடந்தது. அதில் தீபிகா அணிந்த லெஹங்காவின் விலை சுமார் ரூ. 13 லட்சமாம். அனுராதா வக்கீல் வடிவமைத்த சிவப்பு நிற லெஹங்காவை சோனம் கபூர் அணிந்திருந்தார். அதன் விலை ₹70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரிய நகைகள், தங்கக் கலர் மற்றும் அழகான தலை அணிகலன்களுடன் அவர் இந்த ஆடையை அணிந்திருந்தார். நயன்தாரா திருமணம் குறித்து நமக்கு நன்றாகவே தெரியும். திருமணத்தில் முழுக்க எம்பிராய்டரி செய்யப்பட்ட உடையை நயன்தாரா அணிந்தார், அதன் விலை ரூ. 25 லட்சம் என கூறப்படுகிறது.