fbpx

“ இதுதான் காரணம்..” AK 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முதன்முறையாக மனம் திறந்த விக்னேஷ் சிவன்..

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கொடுத்த கதையில் அஜித் திருப்தி அடையவில்லை என்பதால், அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக கூறப்படுகிறது.. மறுபுறம் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள, லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதற்கு இணையான எதிர்பார்ப்பை உருவாக்க மிகப்பெரிய மாஸ் ஆக்‌ஷன் படத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம்..

இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனி AK 62 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து லைகா நிறுவனம் எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.. இந்த படம் துணிவை விட மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக இருக்க வேண்டும் என்று அஜித், மகிழ் திருமேனியிடம் கூறி உள்ளாராம்.. எனவே மகிழ் திருமேனி மீண்டும் கதையில் ஒரு சில மாற்றங்களை செய்து வருகிறாராம்.. எனவே AK 62 படத்தின் அறிவிப்புக்காக அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்..

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், AK 62 படம் குறித்து பேசி உள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ “ஏகே62 எனக்கு ஏமாற்றம். அஜித் குமார் தரப்பில் எந்த தவறும் இல்லை. தயாரிப்பு தரப்புக்கு கதையின் 2-ம் பாதியில் திருப்தி இல்லை. மகிழ் திருமேனி போன்ற ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

அடுத்த 5 நாட்களுக்கு இதுதான் நடக்கும்..!! வானிலை மையம் சொன்ன ஷாக்கிங் ரிப்போர்ட்..!!

Fri Apr 7 , 2023
கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இயல்பிலிருந்து வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் […]

You May Like