fbpx

கிரிக்கெட் ஜாம்பவான்கள் சுயிங் கம் சாப்பிடுவதற்கு இதுதான் காரணம்!… அதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கிரிக்கெட் மைதானத்தில் சுயிங் கம் ஏன் சாப்பிடுகிறார்கள் என்றும் இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

சூயிங் கம் சாப்பிடுவது கிரிக்கெட் வீரர்களை அதிக மனஅழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்து அமைதியாக வைத்திருக்க உதவும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 140 கிமீ வேகத்தில் வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கேட்சுக்காக காத்திருக்கும் பீல்டராக இருந்தாலும் சரி, கிரிக்கெட் என்பது ஒருவர் நிதானமாகவும் மன அமைதியுடனும் இருக்க வேண்டிய விளையாட்டு ஆகும்.

இந்தியா போன்ற வெப்பமான காலநிலையை கொண்ட நாடுகளில் அதிக நேரம் மைதானத்தில் நிற்பதால் நீரிழப்பு ஏற்படும். எனவே, சூயிங் கம் மெல்லுவதால் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது. இது உடலில் உள்ள நீரின் அளவை அதிகரிக்காது என்றாலும், அதை மென்று உமிழ்நீரை அதிகமாக வெளியேற்றி, வழக்கத்தை விட தாகத்தை உண்டாக்கும். இதன் விளைவாக, வீரர் அதிக தண்ணீர் குடிக்க வழி செய்கிறது.

கிரிக்கெட் போட்டிகள் மிக நீண்ட நேரம் விளையாட கூடிய விளையாட்டாகும். எனவே இதனால் ஒருவர் தனது கவனத்தை எளிதில் இழக்க நேரிடும். நீண்ட நேரம் எதையும் செய்யும்போது, ​​யாராக இருந்தாலும் கவனத்தை இழக்கத்தான் செய்வார்கள். இங்கு தான் சூயிங் கம் வேலை செய்கிறது. ஆம், சூயிங் கம் மெல்லுவதால் புத்தி கூர்மை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இது பீல்டர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்.

சூயிங் கம் சாப்பிடுவதால் இது உங்கள் அனிச்சை வேகத்தில் நேர்மறையான விளைவைக் கூட ஏற்படுத்தும். சூயிங் கம் மெல்லுவதால் அது மூளையை விழிப்பாக வைத்திருக்க செய்கிறது மற்றும் உடலில் உள்ள மற்ற பகுதிகளை நரம்பு மண்டலத்தின் உதவியோடு விரைவாக செய்திகளை அனுப்ப வழி செய்கிறது என்று ஒரு அறிவியல் ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. சூயிங் கம்மில் உள்ள குளுக்கோஸ் ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டியாக வேலை செய்யும். மேலும் இதனால் கிரிக்கெட் வீரர்கள் ஆற்றல் குறைவாக இருக்கும்போதும் அதை சமாளிக்க இது உதவுகிறது. மேற்சொன்ன காரணங்களால் தான், கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் சூயிங் கம் மெல்லுகின்றனர்.

Kokila

Next Post

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் அரியர் தேர்வுகள் ரத்து..!

Fri Aug 18 , 2023
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ரத்து […]

You May Like