“வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரை செய்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரேஷ்மா பசுபுலேட்டி. இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு மிக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. பின்னர், திரைப்படங்களில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில், இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், அண்மையில் இவர் பேட்டி ஒன்றில், “தன்னுடைய மார்பகம் பெரிதாக இருப்பதைப் பற்றி பலரும் பலவிதமான கேள்விகளையும் கேலிகளையும் செய்வதாக கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இதை இவ்வாறு பெரிதாக இருப்பதற்கு காரணம் எந்தவிதமான மருந்துகளும் இல்லை இது இயற்கையாகவே நடந்து விட்டது.
அதுமட்டுமின்றி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது சரியான உணவு கிடைக்காததால் உடல் எடை குறைந்து விட்டது. இந்நிலையில், உடலை தேற்ற வேண்டி அடிக்கடி உணவுகளை நிறைய சாப்பிட்டேன். அப்போது தான் எனக்கு ஹைபோ தைராய்டிசம் வந்துள்ளது என தெரிந்து கொண்டேன். இதன் காரணத்தால் அதிகளவு எடை போட்டேன். இதையடுத்து, தான் என் மார்பகம் பெரிதானது. இதற்காக எந்தவிதமான சிகிச்சையும் எடுக்கவில்லை” என்று தற்போது ஓப்பனாக தன் மார்பகம் பெரிதான அதற்கான காரணத்தை பலர் மத்தியிலும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.