fbpx

’எனக்கு கொரோனா வந்தபோது பெரிய பாதிப்பு வராமல் போனதற்கு இதுதான் காரணம்’..! – முதல்வர்

எனக்கு 70 வயது ஆனாலும் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன்-தம்பி போலத்தான் இருப்போம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் பெருநகர மாநகராட்சி இணைந்து மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, “Happy Streets” என்கிற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை “Happy Streets” நிகழ்ச்சி நடைபெறும். இந்த சாலைகளில் 3 மணி நேரத்துக்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் – நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச வாடகை சைக்கிள் ரெய்டு, ஸ்கேட்டிங், சாக் ரேஸ், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், டார்ட் போர்டு போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

’எனக்கு கொரோனா வந்தபோது பெரிய பாதிப்பு வராமல் போனதற்கு இதுதான் காரணம்’..! - முதல்வர்

இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற “Happy Streets” நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு வந்து சைக்கிள் ஓட்டிய முதல்வர், பின்னர் டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், பாஸ்கெட் பால் ஆகிய விளையாட்டுகளை விளையாடினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ”எனக்கு கொரோனா வந்தபோது பெரிய பாதிப்பு வராமல் போனதற்கு காரணம் உடற்பயிற்சிதான். எனக்கு 70 வயது ஆனாலும் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன்-தம்பி போலத்தான் இருப்போம். உடல்நலத்தை பேணிக்காத்தால் கவலைகள், மன சங்கடங்கள் நம்மைவிட்டு ஓடிப்போகும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என கூறினார்.

Chella

Next Post

ஐபோன் வைத்திருப்பவரா நீங்கள்..! இதை முதலில் செய்யுங்கள்..! ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை..!

Sun Aug 21 , 2022
ஐஃபோன், ஐபேட் (Ipad) ஆகியவை மென்பொருள் பாதிப்பை சந்திக்கக்கூடும் என அவற்றின் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பாதுகாப்பு குறித்த இரண்டு அறிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஐஃபோன் 6எஸ் மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள் மற்றும் ஐபேட் 5ஆம் தலைமுறை மற்றும் ஐபேட் ப்ரோ (Pro) மாடல்களில் மென்பொருள் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை ’ஹேக்கர்கள்’ பயன்படுத்தக் கூடும் என்பதால், மென்பொருளை அப்டேட் […]
ஐஃபோன் பயனர்களை அதிரவைத்த ஆப்பிள் நிறுவனம்..!! இந்த சேவைக்கான கட்டணம் தாறுமாறாக உயர்வு..!!

You May Like