Safest city: இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் பணிபுரிகின்றனர். ஐடி நிறுவனங்கள் முதல் ஹார்டுவேர் நிறுவனங்கள் வரை பெண்கள் தங்கள் இடத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் பெண்களுக்கு எந்த நகரம் சிறந்தது என்ற கேள்வி எழுகிறது. அந்தவகையில், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் பெங்களூரு மாறியுள்ளது. அதாவது, வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதல் இடத்தை பிடித்துள்ளது.
பெங்களூரு நகரம் பெண் தொழில் வல்லுநர்களுக்கு உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய சூழலை வழங்குகிறது. பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தவிர மும்பை மூன்றாவது இடத்திலும், டெல்லி எட்டாவது இடத்திலும் உள்ளன. பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமான ‘அவ்தார் குரூப்’ மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் நாட்டின் 25 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அதில் 16 நகரங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவை.
திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகள், அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் பெண்கள் பெங்களூருக்கு அதிக மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். இதில், மும்பையும், பெங்களூருவும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இந்த நகரங்களில் வேலை சந்தை மற்றும் திறன்களை மேம்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதேசமயம் சென்னையும் ஐதராபாத்தும் இந்த விஷயத்தில் கொஞ்சம் பின்தங்கி உள்ளன.