நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏற்கனவே சில நிர்வாகிகள் விலகிய நிலையில், தற்போது பெண் பிரபலம் ஒருவர் அக்கட்சியில் விலகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் விலகினார். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த சுகுமாரும் விலகினார். இருவரும் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியில் இருந்து விலகி, சீமான் தனிப்பட்ட கருத்துக்கள் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
அதேபோல், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டனும் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் தான், தற்போது நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி விலகியுள்ளார். மேலும், அவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கட்சியின் தலைமை செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், குறிப்பாக பெண்களுக்கு அந்த கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்றும் டாக்டர் இளவஞ்சி குற்றம் சாட்டினார். இது குறித்து சீமானிடம் புகார் அளித்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Read More : தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்..? எப்போது தெரியுமா..? அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தேர்தல் ஆணையம்..!!