வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்பு தொகையை தங்கள் அக்கவுண்ட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்களே ஏன் தெரியுமா? அப்படியானால், மாதாந்திர இருப்பாக எவ்வளவு தொகையை பராமரிக்க வேண்டும்? குறைந்தபட்ச இருப்பு தொகையை வங்கிக்கணக்கில் வங்கிகள் பராமரிக்க வேண்டும் என்பது ஆர்பிஐ-யின் முக்கிய உத்தரவாகும். குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காதது குறித்து, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஒரு மாதத்திற்குள் அந்த தொகையை பராமரிக்காவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு கட்டணங்களை விதிக்கின்றன. மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கும் தங்கள் கஸ்டமர்களுக்கு, மெசேஜ் மூலமாகவோ அல்லது மெயில் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ முதலில் தகவல் தெரிவிக்கப்படும்.
பின்னர், வாடிக்கையாளர்களுக்கு இருப்புத்தொகையை பராமரிக்க ஒரு மாதம் வரை அவகாசம் தரப்படுகிறது. இந்தக் காலக்கெடுவுக்கு பிறகு, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து அபராதத்தையும் விதிக்கும். மினிமம் பேலன்ஸில், எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும்.. அதாவது நிலையான சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படும். அதேசமயம், குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்கான அபராதம் கணக்கை எதிர்மறையாகவோ அல்லது கழிப்பதாகவோ எடுக்கக்கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறையாகும்.
எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் இருப்பிடத்தை பொறுத்து, மாதம் சராசரியாக ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 வைத்திருக்க வேண்டும். ஹெச்டிஎப்சி வங்கியை பொறுத்தவரை, நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் 10,000 ரூபாய் இருப்பையும், அரை நகர்ப்புற இடங்களில் உள்ளவர்கள், ரூ 5,000 இருப்பையும், கிராமப்புறங்களில், ரூ.2,500 காலாண்டு இருப்பையும் பராமரிக்க வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கியில், குறைந்தபட்ச மாதம் சராசரி இருப்புத் தொகையாக 10,000 ரூபாய் மெட்ரோ அல்லது நகர்ப்புறப் பகுதிகளுக்கும், அரை நகர்ப்புற இடங்களுக்கு 5,000 ரூபாயும், கிராமப்புற இடங்களில் 2,000 ரூபாயும் பராமரிக்க வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் காலாண்டு நிலுவையாக, ரூ. 20,000, அரை நகர்ப்புற, கிராமப்புறங்களில் ரூ. 1000 மற்றும் ரூ.500 இருக்க வேண்டும். கோடக் மஹிந்திரா வங்கியில், மெட்ரோ பகுதியில் ரூ.10,000, மெட்ரோ அல்லாத பகுதிகளில் ரூ.5,000 இருப்பை பராமரிக்க வேண்டும்.