பிரபல பின்னணி பாடகி கல்பனா, கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்கொலைக்கு முயலவில்லை என்றும், மருத்துவர் பரிந்துரைத்த தூக்க மாத்திரையை அதிகம் சாப்பிட்டதால், மயக்கம் அடைந்ததாக விளக்கம் அளித்திருந்தார்.
இவர் வெளியிட்டிருந்த வீடியோவில், ”தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகவும், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டதால் மயக்கம் அடைந்ததாகவும் கூறினார். மேலும், தன்னைக் குறித்தும் தனது கணவர் குறித்தும் சோஷியல் மீடியாவில் தவறான வதந்தி பரப்பி வருவதாகவும், நான் இன்று உயிரோடு இருப்பதற்கே எனது கணவர் தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”தற்போது நடந்து முடிந்த சம்பவங்களால் எனக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் கிடைத்திருக்கிறது. எனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. ஒரு நல்ல செய்தி 100 பேரிடம் சேர்கிறது என்றால், ஒரு கெட்ட செய்தி 1,000 பேரிடம் சேரும்.
எனக்கு நுரையீரல் பிரச்சனை இருக்கிறது. இதற்கிடையே, சட்டப்படிப்பையும் படித்துக் கொண்டு, சினிமா கேரியரையும் கவனித்து வருகிறேன். பல ஆண்டுகளாகவே எனக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் இருப்பதால், தூக்க மாத்திரை எடுத்து வருகிறேன். சம்பவத்தன்று அதிக டோஸ் மாத்திரை எடுத்துக் கொண்டதால் மயக்கம் வந்து விட்டது. எனது கணவருடன் பேசிக் கொண்டிருக்கும்போதே தான் நான் மயங்கி விழுந்தேன். உடனே அவர்தான் போலீசுக்கும் ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்து என்னை காப்பாற்றினார். மீடியாக்கள் கூட தவறான செய்திகளை பரப்பினார்கள். மயங்கிய நிலையில் இருந்த எனது முகத்தை, போர்வையை விலக்கிவிட்டு, போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர்.
சினிமாக்காரர்கள் என்பதால் எங்கள் மீது சேற்றை வாரி அடிக்கிறார்கள். காதில் கேட்க முடியாத விஷயங்கள் நடக்கிறது. நாட்டில் நடக்கும் தவறுகளை பற்றி செய்தி போடாமல், சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை செய்திகளாக போடுகிறார்கள். தவறான செய்திகளை யூடியூப் சேனல்கள் பதிவிட்டுள்ளனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. சினிமா துறையைச் சேர்ந்தவர்களை ஏன் மட்டமாக பார்க்கிறீர்கள். எனவே, முதல்வர் முக.ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஊடகங்கள், யூடியூபில் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.