உணவுப் பொருட்களின் பில்களில் கட்டாயம் உரிமம் எண்ணை அச்சிட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது..
இந்தியாவில் உணவுப் பொருட்கள் தயார் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் அனைவரும் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இதே போல் ஹோட்டல்கள், சிறிய விற்பனைக் கடைகள் என உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் இந்த அனுமதியை பெற்ற பிறகே உணவு பொருள் விற்பனை செய்ய வேண்டும்.. மேலும் இந்த அனுமதி பெறாமல் உணவுப் பொருட்கள் விற்பனைக் கடைகள் நடத்துவது சட்டப்படி குற்றம்..
இந்நிலையில், உணவுப் பொருட்களின் பில்களில் உணவுப் பாதுகாப்பு உரிமம் எண்ணை கட்டாயம் அச்சிட வேண்டும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. உணவுப் பொருட்கள் கண்டறிவதை மேம்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு தொடர்பு செயலி மூலம் சரிபார்த்தல், உணவுப் பாதுகாப்பு குறைகளை உடனடியாக சரி செய்தல் ஆகியவற்றுக்கு இது உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளது..