fbpx

தினமும் இந்த ஒரு ஜூஸ் போதும்..!! நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்..!! ட்ரை பண்ணி பாருங்க..!!

பொதுவாக நம்மில் பலருக்கும் பப்பாளி மிகவும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது. மேலும், இதில் ஏராளமான நன்மைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பப்பாளி செரிமான கோளாறு, உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து என்றும் சொல்லப்படுகிறது. நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் இந்த பப்பாளி ஜூஸ்-ஐ தினமும் குடித்து வர வேண்டும் என கூறப்படுகிறது.

மேலும், பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேனில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நல்ல பலனை விரைவில் கொடுக்கும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இந்த பப்பாளி ஜூசை தினமும் அருந்தி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பப்பாளியில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் நம்முடைய உடலில் வளர் சிதை மாற்றங்களை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவி செய்கின்றன.

இந்த பப்பாளி ஜூஸை குடிப்பதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் மறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பப்பாளியில் உள்ள கேரட்டினாய்ட் மிகவும் சக்தி வாய்ந்த பொருட்கள். எனவே, இவை கண்கள் மற்றும் சருமத்திற்கு நன்மையை பயக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரை அணுகி அதற்கு பின்னர் இதை எடுத்துக் கொள்வது சிறந்த பலன்களைத் தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கர்ப்பிணி தாய்மார்களே எச்சரிக்கை..!! கருவில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொரோனா..!! ஆய்வில் அதிர்ச்சி..!!

Tue Apr 11 , 2023
தாயின் கருப்பையில் இருக்கும் போது பச்சிளம் குழந்தையின் மூளையை கொரோனா தாக்கும் என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2020இல் கர்ப்பமாக இருந்த 2 இளம் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு […]

You May Like