fbpx

இந்த ஒரு ஜூஸ் போதும்..!! சிறுநீரக கற்கள் பிரச்சனையே வராது..!! மருத்துவர்கள் கொடுக்கும் அட்வைஸ்..!!

வைட்டமின் சி இருக்கக் கூடிய எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி ஜூஸை தினந்தோறும் குடித்துவந்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரக கற்கள் எதனால் வருகிறது என்றால் கால்சியம், ஆக்ஸலேட் ஆகிய இரு உப்புகளும் ஒன்று சேரும் போது நமக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இதை எப்படி தடுப்பது, அந்த கற்களை எப்படி கரைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக் கொள்வோம்.

நிறைய தண்ணீரை குடிப்பதன் மூலமாக முதலில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். ஒரு நாளைக்கு 3 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். நீராகாரங்களாக நிறைய சேர்க்கும் போது சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது. மேலும், வைட்டமின் சி இருக்கக் கூடிய எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி ஆகியவற்றில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இது, சிட்ரேட்டாக இருக்கும் போது கால்சியமும் ஆக்ஸலேட்டும் ஒன்று சேராமல் தடுப்பதற்கு இது உதவுகிறது.

இதனால் கற்கள் ஏற்படாது. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள் எலுமிச்சை ஜூலை ஒரு நாளைக்கு 3 முதல் 4 தடவை எடுத்து கொண்டே வந்தால் சிறுநீரக கற்கள் கரைத்துவிடும். ஆன்டி இன்ஃபிளமேட்டரி எஃபெக்ட் இருப்பதால் 10 முதல் 20 துளசி இலைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. அடுத்தது மாதுளை பழத்தில் துவர்ப்பு சுவையுடன் கூடியதை ஜூஸ் செய்து குடித்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். இளநீர், தர்ப்பூசணி, மோர் உள்ளிட்ட நீராகாரங்கள் நிறைய எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More : பழிக்கு பழி..!! நடுரோட்டில் சட்ட கல்லூரி மாணவன் படுகொலை..!! நெல்லையில் பயங்கரம்..!! நடந்தது என்ன..?

English Summary

It is necessary to drink 3 to 3.5 liters of water a day.

Chella

Next Post

செகண்ட் ஹேண்ட் கார் மீதான வரி முதல் பாப்கார்ன் வரி வரை..!! GST கூட்டத்தின் முக்கிய முடிவுகள் இதோ..

Sat Dec 21 , 2024
GST Council ups tax on sale of used cars by businesses; says rate on popcorn depends on flavour

You May Like