fbpx

என் மொத்த பிறவிக்கும் இந்த ஒரு விஷயம் போதும்… சூப்பர் ஸ்டாரின் பாராட்டு குறித்து மனம் நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா.!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் 45 கோடி வசூல் செய்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தின் வெற்றி கொண்டாட்டங்களில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயமுத்தூரில் நடைபெற்ற வெற்றி விழாவிலும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எஸ்.ஜே.சூர்யா இந்தத் திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் குறிஞ்சி மலர் போன்றது என தெரிவித்தார்.

அப்போது சூப்பர் ஸ்டார் இந்த திரைப்படத்தின் வெற்றி குறித்து பாராட்டியதையும் நினைவு கூர்ந்தார். இந்தத் திரைப்படம் தொடர்பாக பாராட்டு கடிதத்தை எழுதி இருந்த ரஜினிகாந்த் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றும் இது கார்த்திக் சுப்புராஜின் குறிஞ்சி மலர் எனவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற திரைப்படங்கள் மிகவும் அரிதாக வரும் என அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வின் நடிப்பை பாராட்டிய அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்று சூர்யாவின் நடிப்பு இருக்கிறது என புகழ்ந்தார்.

இது குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய நடிப்பை நடிகை வேல் எம்.ஆர்.ராதா அவர்களுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியது என்னுடைய வாழ்நாளில் கிடைத்த ஆகச்சிறந்த பாராட்டு என தெரிவித்தார். இந்தப் பிறவியில் கிடைத்த மிகச்சிறந்த பாராட்டாகவும் அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் கடிதம் பொதுமக்களிடம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியிருப்பது இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு மேலும் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

Kathir

Next Post

மாணவர்களை குறி வைக்கும் தளபதி விஜய்..! அதிரடியாக திறந்த விஜய் மக்கள் இயக்கம்.!

Sat Nov 18 , 2023
தளபதி விஜய் அரசியலை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. அவரது ரசிகர்கள் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவரது அரசியல் நகர்வுகள் ஆரம்பமானது. சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்கியது மற்றும் மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கிய கௌரவித்தது என அவரது அரசியல் நகர்வுகள் புயல் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதன் மற்றொரு பகுதியாக தளபதி விஜயின் நூலகம் […]

You May Like