fbpx

ஆகஸ்ட் 31-க்குள் இதை செய்துவிட வேண்டும்.. இல்லை எனில் சிக்கல்.. பிஎன்பி வங்கி அறிவிப்பு..

கடந்த பல மாதங்களாக, பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. KYC செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கி வசதிகளின் பலன்களை எளிதாகப் பெறுவதுடன், வங்கிகளும் தங்கள் வங்கிச் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணிக்க முடியும். KYC செயல்முறையை அப்டேட் செய்வதன் மூலம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு மற்றும் அது தொடர்பான பிற சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது.

அந்த வகையில் பொதுத்துறை பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு KYCஐ அப்டேட் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் KYCஐ விரைவில் புதுப்பிக்குமாறு வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிஎன்பி வங்கி “ ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களும் KYC ஐ அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

எப்படி KYC-ஐ அப்டேட் செய்வது..? PNB கணக்கு தொடர்பான தகவல்களை புதுப்பிக்க, நீங்கள் KYC படிவத்தை பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம். KYC விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றால் மட்டுமே வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க முடியும். வங்கிக் கிளைக்குச் சென்று KYC தொடர்பான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலமாகவும் தகவலைப் புதுப்பிக்கலாம். உங்கள் தகவலில் ஏதேனும் மாற்றம் இருந்தால், மின்னஞ்சல் மூலம் KYC ஐ புதுப்பிக்க முடியாது.. வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று KYC புதுப்பிக்க வேண்டும்..

Maha

Next Post

'ஜட்ஜ் ஐயா வேற இப்படி சொல்லிட்டாரு'..! 'எங்கபோய் தேடுறது'..! நித்தியை கைது செய்வதில் நீடிக்கும் குழப்பம்..!

Fri Aug 19 , 2022
பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும் நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில், தன்னை சாமியாராக அவதானித்துக் கொள்ளும் நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் சிஷ்யை ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு […]

You May Like