விஞ்ஞானிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தயாராகும் நிலையில், இதற்கான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக உள்ளது. மேலும், 3 ஆளில்லா விண்கலம் அனுப்புவது உட்பட சுமார் 20 முக்கிய சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “2035க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது மற்றும் 2040-க்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்ட புதிய மற்றும் லட்சிய இலக்குகளை இந்தியா இப்போது இலக்காகக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளி மற்றும் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையேயான பயணத் திட்டங்களை மனதில் கொண்டு பணியாற்றுமாறு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.