fbpx

கலை, அறிவியல் கல்லூரிகளில் இதை பின்பற்ற வேண்டும்.. அதிரடி உத்தரவு..

கலை அறிவியல் கல்லூரிகளில் பி.காம் 2-ம் ஆண்டு சேர்க்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது..

அனைத்து கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.. அதில் “ 2021-ம் ஆண்டு உயர்கல்வித்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி 2022-23 முதல் கல்வியாண்டில் நேரடியாக பி.காம், 2-ம் ஆண்டில், வணிகவியல் பயிற்சி பட்டயப்படிப்பு (டிப்ளமோ) மற்றும் வணிகவியல் பயிற்சி கணினி பயன்பாடுகள் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க அரசு மற்றும் அரசு சுயநிதி கல்லூரி முதல்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது..

இதுகுறித்து 2022-23-ம் ஆண்டின் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.. ஆனால் சில கல்லூரிகளில் பி.காம். 2-ம் ஆண்டு சேர்க்கை செய்யப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது..

எனவே உயர்கல்வித்துறை அரசாணையில் தெரிவித்த பி.காம் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையை பின்பற்ற வேண்டும் என்று தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

பென்ஷன் வாங்கும் நபர்களா நீங்க...? அப்போ 18-ம் தேதிக்குள் இதை செஞ்சு முடிச்சிருங்க...! இல்லனா சிக்கல்...

Fri Aug 12 , 2022
சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் புகார்களை அல்லது ஆலோசனைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் 18.07.2022-க்குள் அனுப்ப வேண்டும். தியாகராய நகர் தலைமை அஞ்சலகம், தியாகராய நகர் வடக்கு அஞ்சலகம், தியாகராய நகர் […]
மூத்த குடிமக்களுக்கு அதிரடி சலுகைகள்..!! மாதம் ரூ.500..!! உடனே இந்த எண்ணுக்கு ஃபோன் பண்ணுங்க..!!

You May Like