fbpx

மகிழ்ச்சி…! இந்த முறை பொங்கல் பணம் ரூ.1,000 வரும் 4-ம் தேதி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்…!

புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4-ம் தேதி ரூ.1,000 வழங்கப்படும்.‌ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படும்ம என களிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலம் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை வழங்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை, பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரியில் உள்ள 1,30,791 வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 வழங்கப்படும்.

மேலும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் நேரடியாக வங்கி கணக்கு மூலம் 04.01.2024 அன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என‌ தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை மணி!… முன்னாள் அமைச்சர் பகீர் பதிவு!

Sun Dec 31 , 2023
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இது வெறும் செய்தி அல்ல, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டியதற்கான ‘எச்சரிக்கை மணி’ என்றுபதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 3 பேர் கேரளா, 2 பேர் கர்நாடகா, […]

You May Like