டெல்லியில் நடைபெற்ற கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ”இம்முறை காங்கிரஸ் கட்சியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். தமிழ்நாடு அரசியலில் மாபெரும் சக்தியாக விஜயகாந்த் வளர்ந்து வந்தார். தலைவர் மூப்பனார் உடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் விஜயகாந்த். அவரது உடல்நல குறைவால் தேமுதிக இயக்கம் பாதிக்கப்பட்டது. சிறந்த தமிழ் பற்றுடன் எதையும் தைரியமாக சொல்பவர், தேசிய அரசியலிலும் கால் ஒன்றியவர் விஜயகாந்த். இத்தனை இருந்தும் நம்மிடையே இல்லாதது மனக்கவலையை தருகிறது.
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படவில்லை. மகாத்மா காந்தியின் யாத்திரை போன்று இந்தியாவை மையமாக வைத்து தான் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரை நடைபெற்றது” என்று தெரிவித்தார்.