யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில்இந்த வாரம் மகேஸ்வரி வெளியேறி இருக்கின்றார்.
பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக ராம் பற்றிய பேச்சுக்கள்அடிபட்டது. கடைசி இடத்தில் இருந்ததும் ராம்தான். ஆனால், மகேஸ்வரி வெளியேறி இருப்பது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விறுவிறுப்பாக சென்ற நிகழ்ச்சியில் வி.ஜே. மகேஸ்வரியும் நன்றாக விளையாடினார் என்ற பெயரை எடுத்தார். இருந்த போதிலும் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்து வந்தார். பிக்பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 11 பெண்களும் 9 ஆண்களும் ஒரு திருநங்கையும் பங்கேற்றனர்.
முதல்வாரம் ஜி.பி.முத்து வெளியேறினார். சாந்தி, அசல்கோளாறு, செரீனாஅடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினார்கள். அடுத்ததாக ராம் வெளியேற வேண்டும் என ரசிகர்கள் வேண்டிக்கொண்டனர்.
அசீம், விக்ரமன், மகேஸ்வரி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, ஏ.டி.கே. ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். ராம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் மகேஸ்வரி இந்த வாரம் வெளியேறியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராம் அமைதியாக விளையாடி வருகின்றார். ராம் வெளியேறினால் நன்றாக இருந்திருக்கும் எனவும், அவர் வாய்திறந்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே அவர் வரும் வாரத்திலாவது நன்றாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் கோரியுள்ளனர்.