சாலையோர வியாபாரிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகள் வழங்கி வருகின்றது. இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி, நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் 267 லட்சமும், ஊரக வீட்டு வளர்ச்சி திட்டத்தில் 1.67 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பிரதமரின் வீட்டு வாஸ்து திட்டம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் போன்ற ஏழை மக்கள் இந்த திட்டத்தில் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி சாலையோர வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.