fbpx

World Blood Donor Day 2024 : “உதிரம் கொடுத்து உயிர்காப்போம்” இன்று உலக ரத்த தான தினம்..!!

உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது. ABO ரத்த குரூப் முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக தானம் செய்வதன் முக்கியத்துவத்தை குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த வருடம் World Blood Donor Day 2024: Theme ஆனது உலக இரத்த தானம் செய்பவர்களின் தினத்தின் கருப்பொருள் ’20 Years of Celebrating Giving: Thank You Blood Donors!’ உலக இரத்த தானம் தினத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் இந்த தீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இரத்த தானத்தின் முக்கியத்துவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இரத்ததானம் செய்பவர்களின் ஆதரவை அங்கீகரிக்கவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்யும்போது, உடலுக்கு ஏற்படும் நன்மை குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.

இரத்த தானம் உடலை பலவீனமாக்குமா?​

பொதுவாக ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகம்இருக்கும். அது நம் உடலில் கல்லீரல், இதயம் ஆகிய இடங்களில் படிந்து உடலுக்குச் சோர்வையும், துன்பத்தையும் தரும். ரத்த தானம் செய்யும்போது, இந்த அதிகப்படியான இரும்புச் சத்தும் ரத்தத்தோடு சேர்ந்து செல்வதால் இரும்புச் சத்து சமன்செய்யப்படுகிறது. மேலும் ரத்த தானமாக நாம் ஒரு யூனிட் கொடுத்தால் அதை 3 பேருக்குப் பயன்படுத்துவார்கள். சில சமயம் ஒருவருக்கேகூட பயன்படலாம். இதனால்யாரோ ஒருவருக்கு நாம் நன்மை செய்துள்ளோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது.

ரத்த தானம் செய்யும் போது புதிய ரத்தம் மற்றும் ரத்த செல்கள் உருவாவதை ஊக்குவிக்கப்படுகிறது என்பதே உண்மை. இரத்த தானம் உடலை பலவீனமாக்கும் என்பது கட்டுக்கதை. ரத்த தானம் என்பது மிகவும் பயனுடையதாக அமைகிறது. ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தால், நம் உடலில் உள்ள 650 அளவு கலோரியை எரித்துவிடுகிறது என்கின்றனர். இது ரத்த தானம் செய்வதால் நம் உடலுக்குக் கிடைக்கும் பயனாகும்.

யாரெல்லாம் இரத்த தானம் செய்ய வேண்டும்​

  1. WHO இன் படி, 18-65 வயதுக்குட்பட்ட ஒருவர் இரத்த தானம் செய்யலாம்.
  2.  இரத்த தானம் இறுதியாக 3 மாதத்துக்கு முன்பு கொடுத்திருக்க வேண்டும்.
  3. பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12.0 g/dl க்கும் குறையாமலும், ஆண்களுக்கு 13.0 g/dl க்கும் குறையாமலும் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவை விட குறைவாக உள்ளவர்கள் தானம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
  4. சளி, காய்ச்சல், தொண்டை புண், சளி, வயிற்றுப் பூச்சி அல்லது வேறு ஏதேனும் தொற்று இருந்தால் இரத்த தானம் செய்ய முடியாது.
  5. உடலில் பச்சை குத்தி இருந்தால், முதல் ஆறு மாதங்களுக்கு இரத்த தானம் கொடுக்க கூடாது.
  6. 3 மாதத்துக்கு முன் மலேரியா சிகிச்சை எடுத்துகொண்டவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
  7. ஹெச்ஐவி தொற்று உறுதி செய்யபட்டவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

இரத்த தான தினத்தின் முக்கியதுவம் :

காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் போது அல்லது அறுவை சிகிச்சை செய்யும் போது பற்றாக்குறை இருக்கும் போது மருத்துவமனைகளில் இரத்தம் தேவைப்படுகிறது. இந்த தினத்தின் போது, இந்த நாள் இரத்த தானம் செய்த நபர்களை கெளரவிக்கிறது மற்றும் மற்றவர்களை தானம் செய்ய ஊக்குவிக்கிறது, இது சுகாதாரத் துறைக்கு ஆரோக்கியமான இரத்தத்தை சீராக வழங்குவதை உறுதி செய்கிறது.

Read more ; ’சபாநாயகர் பதவி பாஜகவிடம் சென்றால் குதிரைபேரம் நடக்கும்’..!! காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் எச்சரிக்கை..!!

English Summary

This year marks the 20th anniversary with the theme ’20 years of celebrating giving: thank you blood donors!

Next Post

குவைத் விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல் கொச்சி வந்தடைந்தது..!! தமிழர்களின் உடல்கள் எங்கே..?

Fri Jun 14 , 2024
The bodies of 45 Indians who died in the fire accident in Kuwait were flown to Kochi. Arrangements have been made to send them to their hometowns from there.

You May Like