17 வயது நிரம்பியவர்கள் http://eci-citizenservices.nic.in/default.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையானது ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேவையான ஆவணங்கள்…?
முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.
பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி, கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ். அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு இதில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ., தாசில்தார், பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.