கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் என்று மருத்துவர்கள் கூறுவதால் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனாவின் 4-வது அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன..
அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் முதல் முன் கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது… பின்னர் ஏப்ரல் மாதம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.. எனினும் முதல் மற்றும் 2-வது டோஸின் போது கொடுக்கப்பட்ட அதே தடுப்பூசியை தான் பூஸ்டர் டோஸாகவும் போட வேண்டும்..
இந்நிலையில் கார்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கார்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கார்பவேக்ஸ் போட ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆம்.. பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவனத்தின் (Biological E Limited) கார்போவேக்ஸ் (Corbevax) தடுப்பூசி, அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பன்முகத்தன்மை கொண்ட கோவிட்-19 தடுப்பூசியாக மாறியுள்ளது. இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது..
கோவிஷீல்டு அல்லது கோவாக்ஸின் மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்கள், பூஸ்டர் ஷாட் ஆக கார்பெவாக்ஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திய 6 மாதங்களுக்குப் பிறகு கார்பெவாக்ஸ் பூஸ்டர் கொடுக்கப்படலாம். தடுப்பூசி போடுவதற்கான ஸ்லாட்டை CoWIN போர்டல் வழியாக பதிவு செய்யலாம்.
சமீபத்தில், பயோலாஜிக்கல் இ நிறுவனம், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு மருத்துவ பரிசோதனைத் தரவை வழங்கியது, ஏற்கனவே இரண்டு டோஸ் கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கும் கார்போவேக்ஸ் தடுப்பூசியை ஒரு பன்முக பூஸ்டர் டோஸாக வழங்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று அந்நிறுவனம் கோரியிருந்தது. மருத்துவ பரிசோதனை தரவுகள் கார்போவேக்ஸ் பூஸ்டர் டோஸ் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் காட்டியது.