fbpx

’வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்க’..!! 8 வங்கிகளின் உரிமம் ரத்து..!! ரிசர்வ் வங்கி அதிரடி..!!

கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வங்கி சேவைகளை வழங்குகிறார்கள். கடுமையான கட்டுப்பாடுகள், மோசமான பொருளாதார நிலைமைகள் மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாக இந்த கூட்டுறவு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மிகப்பெரிய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியும் கூட்டுறவு வங்கிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 2023 நிதியாண்டில் சுமார் 8 கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அதனால் கூட்டுறவு வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

ரிசர்வ் வங்கியால் உரிமம் ரத்து செய்யப்பட்ட வங்கிகளில் சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி, டெக்கான் நகர கூட்டுறவு வங்கி, மிலாட் கூட்டுறவு வங்கி, முதோல் கூட்டுறவு வங்கி, ஸ்ரீ ஆனந்த் கூட்டுறவு வங்கி, பாபாஜி தேதி மகிளா அர்பன் வங்கி, லட்சுமி கூட்டுறவு வங்கி ஆகியவையும் உள்ளன. எனவே வங்கி வாடிக்கையாளர்களுக்கு இவற்றில் வங்கிக் கணக்கு உள்ளதா? என்பதைச் சரிபார்க்க வேண்டும். போதிய மூலதனம் மற்றும் பிற விதிமுறைகளை மீறியதால் இந்த கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி இந்த மேற்குறிப்பிட்ட வங்கிகளில் பணப்புழக்கம் இல்லாததாலும் உரிமத்தை ரத்து செய்துள்ளது. மேலும், சில கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, கூட்டுறவு வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். வங்கி திவாலாகினாலோ அல்லது ரிசர்வ் வங்கி, வங்கி உரிமத்தை ரத்து செய்தாலோ, வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ரூ. 5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஐபிஎல்லில் மிரட்டலான ஆட்டம்!... திரும்ப வந்துட்டேனு சொல்லு!... ஆஸி.க்கு ஆப்பு வைக்க!... WTC பைனலில் ரஹானே!

Wed Apr 26 , 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், 17 மாதங்களுக்கு பிறகு ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடரை இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 9 அணிகள் பங்கேற்றன. தகுதிச்சுற்று […]

You May Like