fbpx

DMDK: தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்…!

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு.

இது குறித்து பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில்; பதினெட்டாவது 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Electoral Bonds | தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.!

Sun Mar 17 , 2024
பாரதிய ஜனதா கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரம் இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் எனக் கூறியது. மேலும் 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வரை எஸ்பிஐ வங்கியால் விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களை பற்றிய தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 2019 ஆம் வருடம் ஏப்ரல் […]

You May Like