தமிழ்நாட்டில் எலான் மஸ்காக சபரீசன் உருவெடுத்துள்ளதாக சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 2024ஆம் ஆண்டு தனது வரைவு விண்வெளிக் கொள்கையை வெளியிட்டது. தொழில் வளர்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த கொள்கையின்படி, குலசேகரப்பட்டினத்தில் உருவாகி வரும் விண்வெளிப் பூங்காவுக்கு கிடைத்துள்ள வரவேற்பு, மேலும் பல விண்வெளிப் பூங்காக்களுக்கான தேவைகளை உருவாக்கியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக்கோள் தொடர்பான தொழில்களைத் தொடங்க ஏதுவாக உள்ள மாவட்டங்களாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டன. 22 ஆகஸ்ட் 2024இல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியில், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான தொழில்களில் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசு தீவிரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஒரு மாநில அரசு, விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கும். எலான் மஸ்க்குக்கு விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள ஆர்வத்தைப் பார்த்ததும், நாமும் ஏன் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடக் கூடாது? என்று கழிவறையில் அமர்ந்திருந்த கண நேரத்தில் திராவிட மாப்பிள்ளைக்கு உதித்த சிந்தனையின் விளைவே, தமிழ்நாடு அரசுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள திடீர் ஆர்வம்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு அரசே நினைத்திருக்கலாமே. இதற்கும், திராவிட மாப்பிள்ளை சாருக்கும் (சபரீசன்) என்ன சம்பந்தம்..? என்று உங்களுக்கு கேள்வி எழலாம். கடந்த 22 ஜூலை 2024 அன்று, திராவிட மாப்பிள்ளை சார், பரத் ராம் என்பவரோடு இணைந்து கோபாலபுரத்தில் “வானம் ஸ்பேஸ்” என்று ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தை தொடங்கிய பிறகுதான், தமிழ்நாடு அரசு விண்வெளிக் கொள்கைகளையே வெளியிடுகிறது.
இந்த நிறுவனத்தின் தொடக்க விழா 31 ஜூலை 2024 அன்று, சென்னையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொள்ள ஒரு விழாவாகவே நடத்தியிருக்கின்றனர். இந்நிறுவனத்தின் ஆலோசகராக விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் இருக்கிறார். சபரீசனின் சகோதரர் ஹரிஹரன் என்பவரை இதன் இணை-தோற்றுனர் என்று குறிப்பிட்டிருந்தாலும், கம்பெனி பதிவாளர் ஆவணங்களின்படி, சபரீசனும், பரத் ராமும் மட்டுமே இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். எனவே, தமிழ்நாட்டின் எலான் மஸ்க்காக உருவெடுத்திருக்கும் திராவிட மாப்பிள்ளை சார் சபரீசனை, நாமும் வாழ்த்தலாமே.!! என்று சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.
Read More : இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.56,000..!! திருமணமாகாதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!