fbpx

”நிக்சனை எச்சரிப்பாருன்னு நெனச்சேன்”..!! ஏமாற்றத்தில் வினுஷா போட்ட பதிவு..!!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிரடியாக பிரதீப் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது பிரதீப் ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் அமைந்தது. பிரதீப் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் “பிரதீப் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த போட்டியாளர்களை தகாத வார்த்தைகளால் கூட திட்டி இருக்கிறாரே தவிர, மற்ற எந்த ஒரு பெண் போட்டியாளர்களிடமும் தவறாக நடந்து கொண்டது இல்லை என்றும், மாயா – பூர்ணிமா, இருவரும் வேண்டுமென்றே அவரை டார்கெட் செய்து விரட்டிவிட்டதாகவும் கூறி வந்தனர்.

பிக்பாஸ் வீட்டின் உள்ளேயும், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா ஆகியோர் பிரதீப் மீது வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு மிகவும் தவறானது என்று ஆணித்தனமாக கூறி வந்தனர். மேலும் நேற்றைய தினம் நடந்த எப்பிஷோடில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததில் எனக்கு எந்த பங்கும் இல்லை, அது போட்டியாளர்கள் எடுத்த முடிவு தான் என கமல்ஹாசன் தன் மீது வந்த விமர்சனங்களை சரி செய்ய மழுப்பலாக எபிசோடு முழுவதும் பேசினார்.

நிக்சன் பிக் பாஸ் வீட்டில் நடிகை வினுஷா பற்றி மிகவும் மோசமாக பேசி இருந்தது சர்ச்சை ஆகி இருந்தது. அதற்கு நடிகை வினுஷாவும் கடும் கோபமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். கமல் இந்த வாரம் இது பற்றி கேள்வி எழுப்பி நிக்சனை எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அதனால் “Ended with Disappointment” என வினுஷா தேவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

ஜாலி...! இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...! ஆனால் ஒரு டுவிஸ்ட்...!

Mon Nov 13 , 2023
நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றிரவே புறப்பட்டு வருவது என்பது மிகுந்த சிரமமாக இருக்கும். குறிப்பாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லும் நிலையில் உடனடியாக திரும்பி வருவதில் சிக்கல் உருவாகும். இதை கருத்தில் கொண்டு, நவம்பர் 13-ம் தேதி […]

You May Like