fbpx

” அடுத்த 5-6 மாதங்களில்.. ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள்..” முதலமைச்சர் எச்சரிக்கை…

குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு எதிராக மாநிலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதால், அடுத்த 5-6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்..

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. அதன்படி, 14-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆண்கள், போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள். அசாம் மாநிலத்தில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் அதிகரித்தும் வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலும் அமைச்சரவை கூட்டத்திற்கு பேசிய அம்மாநில முதலமைச்சர் அசாமில் சராசரியாக 31% குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா “அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள்.. ஏனெனில் 14 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை ஒரு ஆண் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டாலும் கூட, அவருடன் உடலுறவு கொள்வது குற்றமாகும்.. பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆண்டுகள். வயது குறைந்த பெண்களை திருமணம் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். பல பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் ஆயுள் தண்டனையை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

சூப்பர்...! வீடுகளில் 40 யூனிட் வரை பயன்படுத்தினால் மின் கட்டண உயர்வு கிடையாது...! அரசு அறிவிப்பு...!

Sun Jan 29 , 2023
40 யூனிட் வரை வீடுகளில் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு கிடையாது‌. கேரளா மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஒரு யூனிட்டுக்கு 9 காசுகள் மின் கட்டணம் உயர்த்தப்படும். ஒரு மாதத்திற்கு 40 யூனிட்கள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு மற்ற நுகர்வோரிடம் இருந்து யூனிட்டுக்கு 9 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என மின்சார […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like