உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கின்ற ராமஜன்ம பூமியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் தரைதளத்தில் 160 தூண்கள், முதல் தரத்தில் 132 தூண்கள், 2ம் தளத்தில் 74 தூண்கள் என்று பிரம்மாண்டமாக உருவெடுத்து வருகின்றது. அயோத்தி ராமர் கோவில் கோவில் வளாகத்தினுள் 5 மண்டபங்கள், அருங்காட்சியகம் ஆய்வு மையம், கலைக்கூடம், நிர்வாகக் கூடங்கள் பக்தர்களுக்கான அறைகள் மற்றும் ஒரு கால்நடை தொழுவம் போன்ற வசதிகள் இந்த கோவிலில் அடங்கி இருக்கின்றன. நடைபாண்டின் இறுதிக்குள் அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து 2024 புத்தாண்டில் இந்த கோவில் தயாராகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் ராமஜென்ம பூமி வளாகத்தை கொண்டு வைத்து தகர்க்கப் போவதாக ஒரு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கின்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராம்கோட் பகுதியில் வசித்து வரும் மனோஜ் என்ற நபரின் கைப்பேசிக்கு அழைத்த அந்த மர்ம நபர் ராமஜென்ம பூமி வளாகத்தை வியாழக்கிழமை அதாவது, நேற்று காலை 10 மணி அளவில் தகர்க்கப் போவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு ராமஜென்ம பூமி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் கோபிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
அதே சமயம் இந்த மிரட்டல் குறித்து வழக்கு பதிவு செய்த ராமஜென்ம பூமி காவல்துறையினர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் யார் என்று வலை வீசி தேடி வருகிறார்கள்.
முன்னதாக அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நேபாளத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு சாலிகிராம் கற்கள் நேற்று அயோத்திக்கு வந்து சேர்ந்தனர். இந்த புனித கற்களை ஸ்ரீராம் ஜன்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கும் முன்பாக ராமர் பிறந்த இடத்தில் மதகுருமார்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாறைகளை மாலைகளால் அலங்கரித்து பூஜைகள் செய்தனர். கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் முக்கிய வளாகத்தில் ராமர் மற்றும் சீதா தேவியின் சிலைகள் கட்டுவதற்கு இந்த பாறைகள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.