fbpx

மிரட்டிய புயல்..!! பிக்பாஸ் வீட்டின் நிலைமை என்ன..? போட்டியாளர்கள் எங்கு இருக்கிறார்கள்..?

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சென்னையில் மிக்ஜாம் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் மின்சாரம் படிப்படியாக கொடுக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், மழைநீர் வடிந்து செல்வதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இந்த புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அவர்களது நிலை என்ன? என்பது குறித்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று சீசன் ஒன்றில் மழை, வெள்ளத்தால் பிக்பாஸ் வீடு பாதிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் சில நாட்கள் நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு பின்பு பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர். இந்தாண்டும் பெருமழை வெளுத்து வாங்கி இருந்தாலும், பிக்பாஸ் வீடு வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாப்பாக உள்ளது என்பதை போட்டியாளர்களே உறுதிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களுக்காக அவர்கள் முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்து உள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ், “வேலை முடிந்து வீட்டுக்கு பார்த்து பாதுகாப்பாக போங்க. ஆங்காங்கே மரங்கள் விழுந்திருக்கும், வயர் கட்டாகி கிடக்கும், மழையில் ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க. எங்களுக்காக உழைக்குறவங்களும் பாதுகாப்பா இருக்கணும். நாங்க இங்கு பாதுகாப்பாக இருந்தாலும் எங்க நினைப்பு எல்லாமே வெளியில் தான் உள்ளது. எல்லோருமே சென்னை வெள்ளத்தைப் பார்த்திருக்கிறோம். எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்குங்க. கண்டிப்பாக உங்களுக்காக நாங்க எல்லாருமே வேண்டிக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார். மற்றப் போட்டியாளர்களும் மக்களுக்காக தங்களது பிரார்த்தனைகளை கூறியுள்ளனர்.

Chella

Next Post

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

Tue Dec 5 , 2023
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் நாளை (டிச.6) முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரும் டிசம்பர் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]

You May Like