fbpx

மிரட்டும் புயல்..!! எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? லிஸ்ட் இதோ..!!

தமிழ்நாட்டில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெண்பாக்கம் ஆகிய 4 தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

அதி தீவிர புயலாக மாறும் ’மிக்ஜாம்’ புயல்..!! 5.30 மணிக்கு வெயிட்டான சம்பவம்..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Mon Dec 4 , 2023
மிக்ஜாம் புயல் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், சென்னையில் இருந்து 130 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 160 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 14 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் இன்று மாலை 5.30 மணியளவில் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை […]

You May Like