fbpx

மிரட்டும் புயல்..!! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சாலைகளிலும் நீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும். வரும் 2ஆம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 3ஆம் தேதி வங்கக்கடலிலேயே புயலாக வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

அடேங்கப்பா!… எவ்வளவு நீளம்!… உலகின் மிக நீளமான கூந்தல்!… கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!

Fri Dec 1 , 2023
இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்னும் சாதனையினை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா(46). இவர் தனது சிறுவயது முதலே தனது கூந்தலை பராமரிப்பதிலும், கூந்தலை வளர்ப்பதிலும் அதிகளவு ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. பொதுவாக பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதில் முடியினை வெட்டி விடுவது சகஜம். அப்படி தான் இவரது பெற்றோரும் வெட்டியுள்ளனர். […]

You May Like