பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று மூன்று மிரட்டல் அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது… ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஹர்ஸ்கிசந்தாஸ் மருத்துவமனையின் எண்ணுக்கு அந்த அழைப்புகள் வந்தன. இதுகுறித்து மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை புகார் அளித்துள்ளது. மருத்துவமனைக்கு 3க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளாது..
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மும்பை இல்லத்திற்கு வெளியே 20 வெடிகுண்டு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதத்துடன் ஸ்கார்பியோ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த காரின் உரிமையான மன்சுக் ஹிரேன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..