fbpx

Kalki 2898 AD | பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி!! பண மழையில் படக்குழு!! மூன்றாவது நாள் வசூல் இத்தனை கோடியா?

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படமான ‘கல்கி 2898 ஏடி’ ஜூன் 27 அன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.

‘கல்கி 2898 ஏடி’ படத்தைப் பொறுத்தவரையில் இந்தியத் திரையுலகத்தின் பெரும் நட்சத்திரங்களான அமிதாப், கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் பலமாக உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முதல் முறையாக நடிக்கும் தெலுங்குப் படம். இப்படி பல விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன. சுமார் 600 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி உள்ளது என சொல்லப்படுகிறது.  உலக அளவில் சுமார் 750 கோடி வசூலித்தால் மட்டுமே இந்தப் படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.

தற்போது படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதன்படி கல்கி படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் 415 கோடி வசூலித்துள்ளது. மொத்தம் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மூன்றே நாட்களில் படத்தின் பெரும்பாலான செலவை திருப்பி எடுத்துள்ளது.

இதில் முதல் நாளில் 191.5 கோடிகளும், இரண்டு நாட்களில் 298.5 கோடிகளும் மூன்று நாட்களில் ரூபாய் 415 கோடிகளும் வசூல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் முதல் நாளில் 191.5 கோடிகளும், இரண்டாவது நாளில் ரூபாய் 107 கோடிகளும் வசூல் செய்துள்ளது. அதேபோல் மூன்றாவது நாளில் 116.5 கோடிகளை வசூல் செய்துள்ளது. படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் 415 கோடிகளை படம் வசூல் செய்து அசத்தலான வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது. விடுமுறை நாளான இன்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து 500 கோடிகளைக் கடக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளது.

Read more ; தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!! – வானிலை ஆய்வு மையம்

English Summary

Three days after the release of the film, the production company has released the information about the collection of the film. According to this, Kalki has collected 415 crores worldwide in the first three days.

Next Post

UPI பேமெண்ட்... மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

Sun Jun 30 , 2024
We need to be alert as fraudsters targeting UPI users are on the rise

You May Like