Afghanistan: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையுடன் உள்ளது.
லாகூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஐபிஎல் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 6 ரன்னிலும், செதிக்குல்லா அடல் 4 ரன்களிலும், ரஹமத் ஷா நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட் தொடக்க வீரர் இப்ராகிம் சாட்ருனும் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டது.
ஹ்ஸ்மதுல்லா 67 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இன்னும் தொடக்க வீரர் இப்ராஹிம் ஷாட்ரன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அஸ்மதுல்லா 41 ரன்கள் வெளியேற அதன் பிறகு அஸ்மதுல்லாஹ் உமர்சாயுடன் சேர்ந்து இப்ராஹிம் ஷாட்ரன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இப்ராகிம் சாட்ரன், இன்று ஒரு சம்பவம் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் பேட்டிங் செய்தார். இங்கிலாந்து வீசிய மோசமான பந்துகளை எல்லாம் அடித்து ரன்களை சேர்த்த இப்ராஹிம் 106 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 325/7 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் அதிர்ந்தது. பில் சால்ட் (12), ஜேமி ஸ்மித் (9) நிலைக்கவில்லை. ரஷித் கான் சுழலில் ‘ஆபத்தான’ டக்கெட் (38) சிக்கினார். நபி பந்தில் ஹாரி புரூக் (25) அவுட்டாக, 22 ஓவரில் 135/4 ரன் எடுத்து தவித்தது. பின் அனுபவ ஜோ ரூட், கேப்டன் பட்லர் சேர்ந்து பொறுப்பாக ஆடினர். ரூட், 50 பந்தில் அரைசதம் எட்டினார். நபி பந்தில் சிக்சர் அடித்த பட்லர் நம்பிக்கை தந்தார். பட்லர், 38 ரன் எடுத்தார். லிவிங்ஸ்டன்(10) ஏமாற்றினார். தனிநபராக போராடிய ஜோ ரூட், 98 பந்தில் சதம் எட்டினார். இது ஒருநாள் அரங்கில் இவரது 17வது சதம். ஓமர்சாய் பந்தில் ரூட்(120 ரன், 11 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. இங்கிலாந்து அணி 46 ஓவரில் 291/7 ரன் எடுத்திருந்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 317 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மதுல்லா ஓமர்சாய், 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றி இங்கிலாந்தை போட்டியில் இருந்து வெளியேற்றியது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெய்நிகர் காலிறுதிப் போட்டிக்கும் வழிவகுத்தது. குரூப் பி சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், ஆப்கானிஸ்தான் இன்னும் தகுதி பெற வாய்ப்பு உள்ளது, ஆனால் அவர்களின் தலைவிதி நெட் ரன் ரேட்(NRR) முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆப்கானிஸ்தான் அரையிறுதி கனவு: இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளில் இருந்து இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் குரூப் பி பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டு தோல்விகளுடன் இங்கிலாந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறுகின்றன, இதனால் பிப்ரவரி 28 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி குரூப்-நிலைப் போட்டியை ஆப்கானிஸ்தான் வெற்றிபெறவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவை விட அதன் நெட் ரன் ரேட்டை ஐ மேம்படுத்தினால், தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் குழு B இல் இருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். ஆப்கானிஸ்தானின் தற்போதைய NRR -0.990 ஆக இருக்கின்றது, அதே சமயம் ஆஸ்திரேலியா +0.475 NRR உடன் உள்ளது. NRR இல் ஆஸ்திரேலியாவை முந்தவேண்டும் என்றால் ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டும்.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி பெற்று, தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திடம் தோற்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் நான்கு புள்ளிகளைப் பெறும். இந்த நிலையில், NRR அடிப்படையில் இரண்டாவது அரையிறுதி இடம் தீர்மானிக்கப்படும். தென்னாப்பிரிக்காவின் வலுவான NRR (+2.140) காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி தேவைப்படும், மேலும் தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய முறையில் தோல்வி அடைந்தால் ஆப்கானிஸ்தான் அரையிறுதி சாத்தியம்.
ஆப்கானிஸ்தான் தோற்றால், அவர்கள் இரண்டு புள்ளிகளுடன் தொடருவார்கள், மேலும் அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிவிடும், ஏனெனில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் அதிக புள்ளிகளுடன் உள்ளன.
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இங்கிலாந்து அணி (0) அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ‘பி’ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற தென் ஆப்ரிக்கா (3 புள்ளி), ஆஸ்திரேலியா (3), ஆப்கானிஸ்தான் (2) என, மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்து ஆப்கானிஸ்தான்-ஆஸ்திரேலியா (பிப். 28, லாகூர்), தென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து (மார்ச் 1, கராச்சி) அணிகள் மோதுகின்றன.
Readmore: வாரம் 2 முறை இதை சாப்பிடுங்க, இடுப்பு வலி மட்டும் இல்ல, எந்த வலியும் வராது!!!