நம் வீடுகளில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. இருப்பினும், சில பொருட்கள், தீங்கற்றதாகத் தோன்றினாலும், நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஹார்வர்ட் மருத்துவ சுகாதாரத்தின் இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, வீடுகளில் பொதுவாகக் காணப்படும் இந்த 3 குறிப்பிட்ட நச்சுப் பொருட்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார்..
3 மறைக்கப்பட்ட ஆபத்துகள்
பிளாஸ்டிக் கட்டிங் போர்டு :
பெரும்பாலான சமையலறைகளில் காய்கறிகளை வெட்ட கட்டிங் போர்டு பலகைகள் பயன்படுத்தப்படுகிறது… ஆனால், நீங்கள் ஒரு பிளாஸ்டிக் வெட்டும் பலகையைப் பயன்படுத்தினால், அதை மாற்ற வேண்டிய நேரம் இது. நீங்கள் ஒரு பிளாஸ்டிக் பலகையில் காய்கறிகளை நறுக்கும்போது, சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உணவில் ஒட்டிக்கொள்ளும். இந்தத் துகள்களை உட்கொள்வது நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
காலப்போக்கில், பிளாஸ்டிக் பலகைகளில் வெட்டுக்கள் நச்சுப் பொருட்களை வெளியிடுகின்றன. மேலும், அவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் கொண்டிருக்கலாம்.
கீறல் விழுந்த நான்-ஸ்டிக் பான்:
தற்போதைய காலக்கட்டத்தில் நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல சமையலறைகளில் ஒரு முக்கிய அங்கமாகவும் உள்ளது.. நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது எளிதானதாக இருந்தாலும், அதில் பல்வேறு ஆபத்துகள் உள்ளன.
கீறப்பட்ட அல்லது சேதமடைந்த நான்-ஸ்டிக் பான்கள் பாலிஃப்ளூரோஅல்கைல் நச்சு பொருட்களை (PFAs) வெளியிடுகின்றன. இந்த பொருட்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று டாக்டர் சௌரப் சேத்தி எச்சரிக்கிறார். எனவே துருப்பிடிக்காத எஃகு சமையல் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
வாசனை மெழுகுவர்த்தி விளக்கு:
வாசனை மெழுகுவர்த்திகள், ஒரு இனிமையான நறுமணத்தை உருவாக்கினாலும், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதை தொடர்ந்து பயன்படுத்தினாலும், வாசனை மெழுகுவர்த்திகளில் உள்ள பித்தலேட்டுகள் ஹார்மோன்களை சீர்குலைத்து, இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும். நீங்கள் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால், வாசனை இல்லாத வகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
Read More : வலது தோள்பட்டையில் வலி இருக்கா..? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..!