தமிழ்நாடு முழுதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது அவர் மீது அனைத்து இடங்களிலும் அழுகிய முட்டைகளை வீச வேண்டும்; இதற்காக நாமக்கல்லில் இருந்து மொத்தமாக அழுகிய முட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று ட்விட்டர் ஸ்பேஸில் சதித் திட்டம் தீட்டிய ரஜினிகாந்த் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெகவினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், விஜய் ரசிகர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக வார்த்தை போர் நடந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான விவகாரத்தில் ரஜினிகாந்த் ஒரு கதை சொல்ல.. அதற்கு விஜய்யும் பதிலடியாக ஒரு கதையை சொல்லி வந்தார். தற்போது விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது நிர்வாகிகளை நியமித்து வரும் விஜய், மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரஜினி ரசிகர்களின் உரையாடல் ஒன்று வைரலாகி வருகிறது. ட்விட்டர் ஸ்பேஸில் நடைபெற்ற ரஜினிகாந்த் ரசிகர்களின் கலந்துரையாடலில் பேசிய ஒருவர், “விஜய்யை ஒருமையில் விமர்சித்துவிட்டு, மளிகை கடையில் ஒரு முட்டை ரூ.6.50-க்கு விற்பனையாகிறது. நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒரு அக்கவுண்ட் தொடங்கி, நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலைக்கே முட்டைகளை வாங்கிவிடுவோம். அதுவும் அழுகிய முட்டை என்றால் வெறும் ரூ.1.50 தான் வரும். விஜய் சுற்றுப்பயணம் வரும் போது சரமாரியாக வீசுவோம்” என்று பேசியுள்ளனர்.
விஜய் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது அவர் மீது அழுகிய முட்டைகளை வீச வேண்டும் என்பதற்கான சதி ஆலோசனைதான் இது. எனவே, விஜய் மீது முட்டைகளை வீச திட்டம் போட்டிருக்கும் ரஜினி ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : எடப்பாடிக்கு எதிராக திரும்பிய செங்கோட்டையன்..!! அதிமுகவில் வெடித்த பூகம்பம்..!! கட்சிக்குள் சலசலப்பு..!!