fbpx

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் : சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.

கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கடந்த மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர். அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், சவுக்கு சங்கர். வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலர்கள் சவுக்கு சங்கரை தாக்கியதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையிலுள்ள அவரது வீட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி தேனி மாவட்ட போலீசார் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டி சீல் வைத்தனர். சவுக்கு சங்கர் மீது, பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர், தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகார்கள் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சிஎம்டிஏ நிர்வாகம் கொடுத்த புகார் உள்ளிட்ட 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருச்சி, கோவை, தேனி, உள்ளிட்ட இடங்களில் காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும். மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது, என்று கூறியுள்ளனர்.

Next Post

PM Modi | "இன்னும் மோடியை மக்கள் நம்புகிறார்களா.?" தேர்தல் வாக்குறுதி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்.!!

Sun May 12 , 2024
PM Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமினில் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெறும் வாக்கு வாக்குப்பதிவிற்காக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்தல் […]

You May Like