‘நாயகன்’ படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன், மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.
கால்ஷீட் பிரச்சனை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகின. இதனிடையே, துல்கர் சல்மானுக்குப் பதிலாக நடிகர் சிம்பு படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தைக் குறிப்பிடும் போஸ்டர் ஒன்றைப் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது.
இந்நிலையில் படத்தின் அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில், படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஏபி இண்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்கிரீன் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த உரிமையை மட்டும் 63 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, தமிழ் படத்திற்கு அதிக விலைக் கொடுத்து வாங்கிய திரைப்படமாகும்.
அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட ‘Apple Vision Pro’ ஹெட்செட்.!! சென்னை மருத்துவர்கள் புரட்சி.!!