fbpx

அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன்‌ மழை…! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடல் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் வடக்கு கேரளா-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது‌.

Vignesh

Next Post

ஸ்மார்ட் சிட்டியாக மாறுகிறது திருப்பதி ஏழுமையான் கோவில்!… என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Sun Sep 10 , 2023
நாட்டிலேயே புகழ்பெற்ற புனித யாத்திரை தலமாக மாறுகிறது திருப்பதி ஏழுமையான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிக மக்கள் வந்து செல்லும் திருப்பதி நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒரு நகர செயல்பாட்டு மையத்தை (COC) நிறுவி, திருப்பதியில் பல்வேறு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) தீர்வுகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. […]

You May Like